Reliance Jio introduces Rs. 2,121 Prepaid Recharge Plan With 1.5GB Daily High-Speed Data for 336 Days
ஏர்டெல் மட்டும் வோடபோன் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களுடைய கட்டணங்களில் படிப்படியாக உயர்த்தி வருகின்றார்கள். இந்நிலையில் சமீபத்தில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது.
இந்நிலையில் இந்த 2020 புத்தாண்டு சலுகையாக ஜியோ நிறுவனம் ரூபாய் 2020 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. இந்த ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி அளவிலான தினசரி டேட்டா, இலவச அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் என்ற சலுகை இருந்தது.
தற்போது இந்த ரீசார்ஜ் சலுகையை ஜியோ அதிரடியாக நீக்கியுள்ளது. தற்போது ஜியோ நிறுவனம் 2,121 என்கின்ற ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். ரூபாய் 2,121 க்கு ரீசார்ஜ் செய்தால் 336 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி அளவிலான தினசரி டேட்டா, இலவச அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் என்ற சலுகை கிடைக்கும் என அறிவித்துள்ளார்கள்.
விலையும் அதிகரித்து வேலிடிட்டி நாட்களையும் குறைத்துள்ளது ஜியோ. இது ஜியோ வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Recharge Plans | Calls | SMS | Data | Validity |
2121 | unlimited Jio to Jio voice calling, and FUP limit on non-Jio calls | 100sms per day | 1.5GB per day | 336 |