மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயருகிறது ? Jio, Vodafone Idea, Airtel mobile recharge price hike news

Jio, Vodafone Idea, Airtel Plan Prices to Be Raised

ஜியோ வருகைக்கு பின்பு பல்வேறு நிறுவனங்கள் JIOக்கு போட்டியாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கொடுத்தார்கள். இந்நிலையில் சமீபகாலமாக பல தொலைதொடர்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றது.

இதன் காரணமாக அனைத்து நிறுவனங்களும் இணைந்து தங்களுடைய ரீசார்ஜ் கட்டணத்தை ஏற்கனவே பல மடங்கு அதிகரித்தார்கள். இந்நிலையில் JIOக்கு கடுமையான போட்டியாக இருக்கும் ஏர்டெல் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 1,035 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

அதுமட்டுமின்றி வர இருக்கும் 5ஜி தொழில்நுட்பத்திற்கு தங்களைத் தயார் படுத்துவதற்காக ரீசார்ஜ் கட்டணங்களை விரைவில் உயர்த்த போவதாக அறிவித்துள்ளார்கள். ஏர்டெல் மற்றும் அல்லாமல் வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களும் விரைவில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடுவார்கள் என தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது .