ரெட்மி நிறுவனத்தின் Redmi 9 Power மொபைல் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதை ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..
ரெட்மி 9 பவர் மொபைல் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தது இந்நிலையில் இதை தற்போது ரெட்மி நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் BIS சான்றிதழ் தளத்திலும், கூகிள் பிளே கன்சோலிலும் சில நாட்களுக்கு முன்பதாகவே பட்டியல் இடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Redmi 9 Power எப்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்கின்ற தேதியை நிறுவனம் தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றின Teaser வீடியோவை வெளியிட்டு இந்த ஸ்மார்ட்போன் பற்றின எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளார்கள்.
சமீபத்திய ஒரு லீக்ஸ் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 15ஆம் தேதி அறிமுகம் ஆகும் என்று தெரிகிறது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 4 ஜி மாடலை ரெட்மி 9 பவர் என்கிற பெயரின் கீழ் இந்தியாவில் அறிமுகம் ரெட்மி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Worlds will collide! Brace yourselves because we're about to redefine what it means to be #PowerPacked. 🔋
— Redmi India (@RedmiIndia) December 7, 2020
Check this space for more: https://t.co/KdkKO8oYFN
Excited? RT & join in on the conversation! 🙌 pic.twitter.com/wHr42j7HYl
Redmi 9 Power என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும் ??
ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Redmi 9 Power Price (Expected)
4GB | 64GB | Rs. 9,999 |
4GB | 128GB | Rs. 10,999 |