மொபைல் போனின் வைரசை புகுத்தியது பிரபல சீன நிறுவனம் ? சீன நீதிமன்றம் இதை கண்டறிந்துள்ளது

பிரபல சீன நிறுவனம் லாபம் ஈட்ட 20 மில்லியன் போன்களில் வைரசை   புகுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சீன நாட்டை சேர்ந்த ஜியோனி நிறுவனம் வாடிக்கையாளர்களிடமிருந்து  லாபம்  ஈட்டும் விதமாக 20 மில்லியனுக்கும் அதிகமான ஜியோனி தொலைபேசிகளில் ஒரு செயலி மூலம் Trojan Horse மால்வேர்கள் வேண்டுமென்றே செலுத்தப்பட்டதாக சீன நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து ஜியோனி நிறுவனம் குற்றவாளி என்று சீனு உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது

சீனா (China) தீர்ப்பு ஆவண நெட்வொர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  புல் முறையைப் பயன்படுத்தி பயனரின் கவனத்திற்கு வராமலேயே இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட ஜியோனி மொபைல் போன்களில் தானாகவே புதுப்பிக்கப்படும்.

இந்த வைரஸ் மூலமாக பயனாளர்களின் அனுமதியின்றி அவர்களுக்கு விளம்பரத்தை காண்பித்து இதன் மூலமாக வருவாய் ஈட்டி உள்ளதாக ஜியோனி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இதன்மூலமாக இந்திய மதிப்பில் 32 கோடி ரூபாயை இந்நிறுவனம் சம்பாதித்து இருப்பதாக அறிக்கை கூறுகின்றது. 

இந்த தகவல் உலகம் முழுவதும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source : 91mobiles