ரெட்மி நோட் 10 ப்ரோ மொபைல் விலை மீண்டும் அதிகரிப்பு !

ரெட்மி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 10 ப்ரோ என்கின்ற மொபைலின் விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது இதன் முழு விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம்..

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ என்கின்ற மொபைலை கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 6 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வு 6 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ  ஸ்மார்ட்போனின் மற்ற மாடலுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. விலை உயர்வை தொடர்ந்து இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் மொபைல் ரூ. 17,499 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Also Read : Xiaomi Redmi Note 10 Pro – Full phone specifications

RamStorageOld PriceNew PriceBuy
6GB64GBRs. 15,999Rs. 15,999amazon
6GB128GBRs. 16,999Rs. 17,499amazon
8GB128GBRs. 18,999Rs. 18,999amazon