வருகிற 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் Whatsapp செயல்படாது என்கிற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். அந்தவகையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் புத்தாண்டில் இருந்து சில மொபைல்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.
IOS 9 மற்றும் Android 4.0.3 இயக்க முறைமைகளுக்கு கீழே உள்ள ஸ்மார்ட்போன்களில் வருகிற 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் Whatsapp இயங்காது.
இதனால் IOS 9 மற்றும் Android 4.0.3 இயக்க முறைமைகளுக்கு கீழே ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த, தங்களது OS வெர்ஷனை அப்டேட் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.