திடீர் திருப்பம் : பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் அனுமதி இல்லை !

பப்ஜி விளையாட்டு மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு சமீபத்தில் பப்ஜி விளையாட்டை இந்தியாவில் தடை செய்தார்கள். இந்நிலையில் இந்தியாவில் சில மாற்றங்களுடன் மீண்டும் பப்ஜி கேம் வெளியாகும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை உறுதி செய்யும் விதமாக பப்ஜி மொபைல் கேமிற்கான டீசர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட வினாவிற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்துள்ளது இதில் மத்திய அமைச்சகம் இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியிடப்படுவதற்கான அனுமதியை இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.