சியோமி நிறுவனம் வருகிற டிசம்பர் 22 வரை No.1 Mi Fan விற்பனையை நடத்துகிறது இதில் மொபைல்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
கிறிஸ்து பிறப்பு பண்டிகை வருவதையொட்டி சியோமி நிறுவனம் வருகிற டிசம்பர் 22 வரை No.1 Mi Fan விற்பனையை நடத்துகிறது. இந்த சிறப்பு விற்பனையின் போது ஸ்மார்ட்போன்கள், மி டிவிகள், லேப்டாப்கள் மற்றும் இதர சியோமி தயாரிப்புகளுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ .8,000 வரையும், மி டிவிகளுக்கு ரூ .4,000 வரையும், மடிக்கணினிகளில் ரூ .9,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நடத்தும் No.1 Mi Fan விற்பனை டிசம்பர் 18-ஆம் தேதி துவங்கி டிசம்பர் 22 வரை Mi.com இணையதளத்தில் நடைபெறுகிறது.