வாட்ஸப் பயனாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த WhatsApp Payments வசதி இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..
வாட்ஸ் ஆப் பே வசதி இந்தியாவில் துவங்கப்பட்டு உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். வாட்ஸ் ஆப் பே என்கின்ற அம்சம் கடந்த சில மாதங்களாக சோதனை அடிப்படையில் இருந்தது தற்போது இந்த அம்சத்தை இந்தியாவில் அனைத்து பயனாளர்களுக்கும் கொடுக்க வாட்ஸ்அப் துவங்கியுள்ளது.
இதைப் பற்றி கருத்து கூறிய இந்தியாவுக்கான வாட்ஸ் ஆப் தலைவர் அபிஜித் போஸ், இதற்கான அனுமதி தங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசால் கொடுக்கப்பட்டதாகவும் அபிஜித் போஸ் கூறினார்.
இந்த புதிய அம்சம் மூலமாக இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேலும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது..