ரூ.199-க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல் !

பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.199-க்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் முழு விபரங்களை பார்க்கலாம்..

அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.199-க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இந்த திட்டம் பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.199 புதிய ப்ரீபெய்ட் திட்டம் :

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.199-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 250 நிமிடங்கள் என்கிற வரம்பின் கீழ் எந்த நெட்வொர்க் உடனும் குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும்.

ஏற்கனவே BSNL-ல் உள்ள பி.வி 186 திட்டத்திற்கு பதிலாக தான் இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்திருக்கிறது. BSNL PV 186 திட்டம் அடுத்த வருடம் முதல் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது