வெறும் 2MB-ல் Instagram Lite செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக் !

பேஸ்புக் நிறுவனம் Instagram Lite செயலியை மீண்டும் அறிமுகம் செய்திருக்கின்றார்கள். இதைப் பற்றிய முழுமையான தகவலை பார்க்கலாம்.

சமூக ஊடக செயலிகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது செயலிகள் அதிக டேட்டாவை எடுப்பது, மொபைலில் அதிகStorage-களை செயலிகள் ஆக்கிரமிப்பு செய்வதும் என்று கூறலாம். 

பிரபலமாக இருக்கும் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக ஊடக தளங்கள்  தங்கள் செயலியின் லைட் பதிப்பை ஏற்கனவே சந்தையில் வெளியிட்டுவிட்டார்கள். அந்த வரிசையில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தற்போது வெறும் 2MB-க்கும் குறைவாக இருக்கும் Instagram Lite பதிப்பை வெளியிட்டு உள்ளார்கள்.

இந்த செயலி பங்களா, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு என பல இந்திய மொழிகளில் கிடைக்கும். அளவில் மிக சிறியதாக இருந்தாலும், செயலி சீராகவும், வேகமாகவும் இயங்கும் என கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் லைட் செயலி இந்தியாவில் தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் லைட் செயலி குறைவான டேட்டா பயன்படுத்தும் பயனாளர்கள் மற்றும் குறைவான ஸ்டோரேஜ் மொபைலை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.