விரைவில் Whatsapp Pay இந்தியாவில் அறிமுகமாகின்றது : WhatsApp Pay | Tamil News

WhatsApp Pay receives NPCI approval for operating in India

வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியதில் இருந்து பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுவந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றார்கள்.

ஃபேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பெர்க் அடுத்து 6 மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல நாடுகளில் WhatsApp Pay அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.

தற்போது இந்தியாவில் இதற்கான அனுமதியை NPCI – National Payments Corporation of India வழங்கியுள்ளது. விரைவில் சில பயனாளர்களுக்கு மட்டும் இந்த சேவையை வாட்ஸ்அப் கொடுக்க இருக்கின்றது.

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வாட்ஸ்அப் பயனாளிகளுக்கும் இந்த சேவையை வாட்ஸ்அப் விரிவுபடுத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.