Redmi K20 pro மொபைலை எனி வாங்க முடியாது ? Redmi K20 Pro Discontinued February

Xiaomi Redmi K20 Pro to Be Discontinued in February 2020 – Tech News in Tamil

Redmi K20 pro கடந்த ஆண்டு மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. இதுவரை உலக அளவில் 50 லட்சம் K20 ப்ரோ போன்களை ஏற்றுமதி செய்துள்ளதாக கூறுகிறது Xiaomi .

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி எதிர்பார்த்ததுபோல் அவர்களுக்கு விற்பனை ஆகவில்லை. கடந்த டிசம்பர் மாதம், Xiaomi நிறுவனம், Redmi K30 மற்றும் Redmi K30 Pro போன்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் Redmi K30 (4g) மற்றும் Redmi K30(5G) போன்களை மட்டும் அறிமுகம் செய்தார்கள்.

தற்போது கடந்த ஆண்டு அறிமுகம் செய்த Redmi K20 pro ஸ்மார்ட்போனின் உற்பத்தியை நிறுத்த போவதாக அறிவித்துள்ளார்கள். இதன் மூலமாக Redmi K30 pro ஸ்மார்ட் போனின் அறிமுகம் விரைவில் இருக்கும் என யூகிக்க முடிகிறது. இந்த Redmi K30 pro மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கலாம்.