விரைவில் இந்தியாவில் வாட்ஸ்அப் பே அறிமுகம் செய்யப்பட உள்ளது : WhatsApp payment is live in India Soon

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றது இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் இந்த சேவையை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது இந்தியாவில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் இருக்கின்றது இதற்குப் போட்டியாக விரைவில் ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய வாட்ஸ்-அப் செயலியில் WhatsApp Pay அம்சம் கொண்டு வர உள்ளது.
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றார்கள். அடுத்து 6 மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல நாடுகளில் WhatsApp Pay அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என ஃபேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.