கசிந்தது இன்ஸ்டாகிராம் பயனர்களின் Usernames, Passwords

பெரும்பாலும் தங்களுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற பலரும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த சமூக வலைத்தளம் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
தற்போது இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளது. சில பயனர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க social captain என்ற இணையதளத்தை பயன்படுத்துவார்கள்.
தற்போது அந்த இணையதளம் மூலமாக இன்ஸ்டாகிராம் பயனர்களின் Usernames, Passwords திருத்தப்பட்டுள்ளது. தற்போது இதற்கு விளக்கம் அளித்த இன்ஸ்டாகிராம் நாங்கள் விசாரித்து வருகிறோம் விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார்கள்.