2021 ஆம் ஆண்டு வாட்ஸப்பில் வெளியாக இருக்கும் புதிய அப்டேட் இதுதான் .!!

வாட்ஸ்-அப் செயலியில் Multi Device Support என்கின்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் சிறப்பம்சங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.. 

வாட்ஸ்-அப் செயலியில் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தது. இதற்கான சோதனையை தற்போது வாட்ஸ் அப் தொடங்கியுள்ளதாக WABetaInfo ட்வீட் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் மூலமாக ஒருவர் தனது வாட்ஸ்அப்பை மற்றொரு டிவைசில் ஓபன் பண்ண வேண்டுமென்றால், பழைய டிவைசில் இருந்து லாக் அவுட் செய்ய தேவையில்லை. ஒரேநேரத்தில் 4 டிவைஸ்களில் வாட்ஸ்அப் உபயோகப்படுத்தலாம். 

அதாவது ஒரே வாட்ஸ்அப் கணக்கை, வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும். தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி வெவ்வேறு சாதனங்களில் கன்பிகர் செய்வது  மூலம் கால் செய்வது குறித்த பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

இந்த புதிய அம்சம் தற்போது சோதனையில் மட்டும்தான் இருக்கின்றது இதை பற்றின வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் 2021 ஆம்  ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.