மோட்டோரோலா நிறுவனம் Snapdragon 888 சிப்செட் வசதியுடன் ஒரு புதிய ஸ்மார்ட் போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
மோட்டரோலா நிறுவனம் தற்போது ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படும் ஒரு மொபைலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோட்டோரோலா நிர்வாகி வெய்போவில் மர்மமான ஸ்மார்ட்போன் எதுவாக இருக்கக்கூடும் என்ற Retail box புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
ஏற்கனவே ஸ்வாப்டிராகன் 888 SoC உடன் வெளியாகும் தயாரிப்புகளின் பட்டியலை குவால்காம் ஸ்னாப்டிராகன் பகிர்ந்து கொண்டது, அவற்றில் மோட்டோரோலாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியிருக்கும் Retail box புகைப்படம் வைத்துப் பார்க்கும்போது Snapdragon 888 சிப்செட் வசதியுடன் மோட்டோரோலா நிறுவனம் ஒரு புதிய மொபைலை வருகிற 2021 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Motorola Snapdragon 888 smartphone in the works; may launch in early 2021 pic.twitter.com/4k05Yq0C6f
— Red Tech Tamizha (@Redtechtamizha) December 28, 2020