போக்கோ M3 மொபைல் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்கின்ற தகவலுக்கு போக்கோ நிறுவனத்தின் இயக்குனர் அனுஜ் சர்மா விளக்கம் அளித்துள்ளார்..
போக்கோ நிறுவனம் போக்கோ M3 என்கின்ற ஸ்மார்ட்போனை கடந்த நவம்பர் மாதத்தில் உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. போக்கோ M3 அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், POCO M3 இந்தியன் வேரியண்ட் கூகிள் பிளே ஆதரவு சாதனங்கள் பட்டியலில் தோன்றியது. இதன்காரணமாக இந்த மொபைல் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது ஆனால் போக்கோ நிறுவனம் இதைப் பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் அமைதியாக இருந்து வந்தது.
இந்நிலையில் Poco M3 மொபைல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருந்தது.இதற்கு தற்போது போக்கோ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. போகோ எம் 3 இந்தியா வெளியீட்டு தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று போக்கோ நிறுவனத்தின் இயக்குனர் அனுஜ் சர்மா விளக்கம் அளித்துள்ளார்..
ஏற்கனவே இந்தியாவில் ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரெட்மி 9 பவர் மொபைலும் போக்கோ நிறுவனம் உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்த போக்கோ M3 கிட்டத்தட்ட ஒரே போன்று சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
So indeed the POCO community suggests a January 13 launch for the POCO M3 in India.https://t.co/XWdGHA9I2B#POCO #POCOM3 pic.twitter.com/aWwriCbLNt
— Mukul Sharma (@stufflistings) December 28, 2020