மொபைல் வாங்கினால் சார்ஜர் இலவசம் கிடையாது ? மொபைல் நிறுவனங்களின் புதிய திட்டம்

2021 ஆம் ஆண்டு முதல் மொபைல் வாங்கினால் சார்ஜர் இலவசம் கிடையாது. ஏன் இந்த முடிவு இதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம்..

ஐபோன் 12 சீரிஸ் ஸ்மார்ட்போனில் சார்ஜரை நீக்கி போது முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் மற்றும் சியோமி நிறுவனம் கேலி செய்தது. ஆனால் இந்த இரு நிறுவனங்களும் வர இருக்கும் பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு இன்-பாக்ஸ் சார்ஜர் இல்லாமல் தான் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. 

2020 ஆம் ஆண்டை பொருத்தவரைக்கும் வேகமாக சார்ஜ் செய்யும் பல்வேறு ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையிலும், உலகளாவிய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு சிலர் ஸ்மார்ட்போன்களில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி இருந்தும் இன்-பாக்ஸ் சார்ஜர் பொருத்தவரைக்கும் வேகம் குறைவாக சார்ஜ் செய்யும் சார்ஜர் தான் வைக்கப்பட்டிருந்தது.

இதைப் பல முக்கிய நிறுவனங்கள் ஒரு வியாபார உத்தியாகவே கையாண்டது. வேகமாக சார்ஜ் ஆகும் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்கள் தனியாக பணம் கொடுத்து அதற்கு ஏற்ற வேகமாக சார்ஜ் செய்யும் சார்ஜர்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இந்நிலையில் வரவிருக்கும் Mi 11 ஸ்மார்ட்போன் பெட்டியில் சார்ஜர் இருக்காது என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சார்ஜர் கைவிடப்பட்டுள்ளது என்றும் சியோமி கூறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தை பின்பற்றி 2021 ஆம் ஆண்டு முதல் பல்வேறு முக்கிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களுடைய ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜரை அனுப்பாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.