ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா! 247 நாட்கள் வேலிடிட்டி பிஎஸ்என்எல் அதிரடி திட்டம் !

பிஎஸ்என்எல் நிறுவனம் தன்னுடைய ப்ரீபெய்ட் STV திட்டம் ரூ.998-இல் அதிக டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.  இதை பற்றிய தகவல்களை முழுமையாகப் பார்க்கலாம்..

பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு வட்டத்தில் ப்ரீபெய்ட் STV திட்டம் ரூ.998-இல் அதிக டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. டிசம்பர் 24 முதல் ரூ.998- க்கு  ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களுக்கு கூடுதலாக தினசரி 1 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதே திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைத்து வந்தது தற்போது கொடுத்திருக்கும் சலுகையின் படி தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்தக் கூடுதல் டேட்டா சலுகை டிசம்பர் 24 2020 முதல் அமலுக்கு வந்துள்ளது இது குறுகிய கால விளம்பர சலுகை என்பது குறிப்பிடத்தக்கது,