ஒரு நாளுக்கு 3GB டேட்டா 40 நாட்கள் Validity ! BSNL ப்ரீபெய்ட் STV திட்டம் ரூ.247

பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்திருக்கும் ப்ரீபெய்ட் STV திட்டம் ரூ.247 பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.

ஜியோ வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது. அந்தவகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ப்ரீபெய்ட் STV திட்டம் ரூ.247 திட்டத்தை அறிமுகம் செய்து இருந்தது தற்போது இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.247க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 3 ஜிபி டேட்டா,  100 SMS பெறுவார்கள். மேலும், பயனர்களுக்கு பிற நெட்வொர்க்குகளில் அழைப்பதற்கு தினமும் 250 FUP நிமிடங்கள் வழங்கப்படும்.இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் நாட்கள் 30 நாட்களாக இருந்தது தற்போது அதை 40 நாட்களாக  அதிகரித்து உள்ளார்கள். அதே நேரத்தில், இந்த விளம்பர சலுகையை நவம்பர் 30 வரை பெறலாம்.