நீண்ட வாட்ஸ்அப் ஆடியோ மெசேஜ்களை மிக எளிதாக கேட்பதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளார்கள் இதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப ஆடியோ மெசேஜை FAST FORWARD செய்ய அனுமதிக்கும் ஒரு அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்படுகிறது.இந்த அம்சம் iOS பயனர்களுக்காக உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆடியோ FAST FORWARD செய்யும் வசதி பொருத்தவரைக்கும் மூன்று வேக நிலைகள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது 1x, 1.5x மற்றும் 2x.
அதைப்போல் வாட்ஸப் நிறுவனம் Multi-device support வசதியையும் சோதனை செய்து வருவதாகவும், வரவிருக்கும் வாட்ஸஅப் அம்சங்களை கண்டறிந்து தகவல்களை வெளியிடும் WABetaInfo வலைத்தளம் கூறுகின்றது.
FAST FORWARD செய்ய அனுமதிக்கும் இந்த புதிய அம்சம் பொருத்தவரைக்கும் யாராவது உங்களுக்கு மிக நீளமான வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பினால் அந்த மெசேஜை நீங்கள் விரைவாக கேட்பதற்கு இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த புதிய அம்சம் தற்போது சோதனையில் உள்ளது மிக விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Also Read : Xiaomi Redmi Note 10 Pro vs Xiaomi Poco X3