ரெட்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 மொபைல் இன்று இரண்டாவது முறையாக விற்பனைக்கு வர இருக்கிறது..
ரெட்மி நோட் 10 மொபைல் முதல்முறையாக கடந்த மார்ச் 16-ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. குறைவான விலைக்கு அதிக சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் விற்பனைக்கு வந்ததால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் முதல் விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விற்பனைக்கு வரவில்லை. இந்த மாடலின் விலை ரூ .11,999. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இதையொட்டி ரெட்மி நோட் 10 மொபைலின் இரண்டாவது விற்பனை இன்று(மார்ச் 23) மி இந்தியா வலைத்தளம் மற்றும் அமேசான் வலைத்தளம் மூலமாக நடைபெறுகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலானது விற்பனைக்கு வர இருப்பதாக நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதன் மூலமாக மிகக் குறைவான விலைக்கு ரெட்மி நோட் 10 மொபைலை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இன்றைய விற்பனை பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் இந்திய விலை :
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்டனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலானது ரூ.11,999 க்கும் மற்றும் இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலானது ரூ.13,999 க்கும் விற்பனைக்கு வர உள்ளது.
Also Read : Xiaomi Redmi Note 10 – Full phone specifications