இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 10 ! விலை மற்றும் விபரங்கள் !

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆனது இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி, 33W சார்ஜிங் ஆதரவு, குவாட் ரியர் கேமரா அமைப்பு, ஸ்னாப்டிராகன் 678 SoC போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. 

Also Read : Xiaomi Redmi Note 10 – Full phone specifications

ரெட்மி நோட் 10 விலை மற்றும் விற்பனை விவரங்கள் :

ரெட்மி நோட் 10 மொபைல் இன்று(மார்ச் 16) நண்பகல் 12 மணிக்கு பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான், மி.காம் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக விற்பனைக்கு வருகின்றது.

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்டனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலானது ரூ.11,999 க்கும் மற்றும் இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலானது ரூ.13,999 க்கும் விற்பனைக்கு வர உள்ளது..

RamInternal StoragePriceBuy
4GB64GBRs. 11,999amazon
6GB128GBRs. 13,999amazon

ரெட்மி நோட் 10 மொபைலுக்கு கொடுக்கப்பட்டுள்ள வங்கி சலுகைகள் :

ரெட்மி நோட் 10 மொபைலை அமேசான் மற்றும் மி.காம் மூலமாக ICICI Bank credit cards அல்லது EMI பரிவர்த்தனைகளுடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 தள்ளுபடி உடனடியாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.