பட்ஜெட் மற்றும் Mid-range விலையில் ரெட்மி நிறுவனத்தின் மொபைல்களை வாங்கும் எண்ணத்தில் நீங்கள் இருந்தால், இந்த வாரத்தில் முதல் முறையாக விற்பனைக்கு வரும் ரெட்மி மொபைல்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த ரெட்மி மொபைல்கள் இந்த வாரத்தில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
ரெட்மி நிறுவனத்தின் Note Series மொபைல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு ரெட்மி 9 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தார்கள் அதைத் தொடர்ந்து தற்போது சமீபத்தில் ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெட்மி 10 சீரிஸ்ல் Redmi Note 10, Redmi Note 10 Pro மற்றும் Redmi Note 10Pro Maxஆகிய மூன்று மொபைல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த மொபைல்கள் இந்த வாரத்தில் முதல் முறையாக விற்பனைக்கு வர இருக்கின்றது.
Redmi Note 10 மொபைல் வருகிற மார்ச் 16-ஆம் தேதி விற்பனைக்கு வரும், Redmi Note 10 Pro ஸ்மார்ட்போன் மார்ச் 17ஆம் தேதியும், Redmi Note 10 Pro Max மொபைல் 18-ஆம் தேதியும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மூன்று மொபைல்களும் அமேசான் எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ், ஆஃப்லைன் கடைகள் மூலமாக விற்பனைக்கு வருகிறது.
Also Read : விலை உயர்த்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி M02 மொபைல் !