விலை உயர்த்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி M02 மொபைல் !

சாம்சங் நிறுவனம் மலிவான விலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சாம்சங் கேலக்ஸி M02 என்கின்ற மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தார்கள். சாம்சங் எம் 02 ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட பிறகு,  சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனின்  2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை ரூ.7,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலையும் ரூ.500 அதிகரித்து தற்போது ரூ.7,999 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. 

Also Read : சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் விலை:

RAM StoragePriceBuy
2GB32GBRs. 7,499amazon
3GB32GB Rs.7,999amazon