சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M02 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி M02 மொபைல் இன்று(பிப்ரவரி 2) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தற்போது அறிமுகம் செய்திருக்கும் கேலக்ஸி M02 மொபைல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம் 01 மாடலின் மேம்படுத்தப்பட்ட வாரிசு ஆகும்.
கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி, மீடியா டெக் எஸ்ஓசி, 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 5 மெகா பிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் விலை:
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.6,999 க்கு விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பமும் உள்ளது, ஆனால் விலை பற்றி இதுவரைக்கும் எந்த தகவலும் இல்லை.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M02 மொபைல் எப்பொழுது விற்பனைக்கு வரும் ?
சாம்சங் கேலக்ஸி M02 மொபைல் வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அமேசான், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் முன்னணி ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக விற்பனைக்கு வரும்.
சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் :
Launch Date | 2021, Feb 02 |
Display | 6.5-inch HD+ Infinity-V display |
Build | Glass front, plastic back, plastic frame |
Weight | 206 g |
Colors | Blue, Red, Gray, and Black colour |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Expandable via a microSD card (up to 1TB) |
Rear camera | 13MP primary lens 2MP macro sensor |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 5 MP |
Video (Front) | |
Fingerprint sensor | – |
Chipset | Mediatek MT6739W (28 nm) |
GPU | PowerVR GE8100 |
OS | Android 10 |
UI | One UI 2.0 |
BATTERY | 5,000mAh battery |