சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனிற்கு புதிய அப்டேட் !

சாம்சங்  நிறுவனத்தின் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனிற்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைத்துள்ளது.

சாம்சங் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் மொபைலை அறிமுகம் செய்து இருந்தார்கள். தற்போது இந்த ஸ்மார்ட் போனுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யுஐ 3.1 அப்டேட் வழங்க துவங்கி உள்ளது. 

முன்னதாக கேலக்ஸி எம்51, எஸ் சீரிஸ் மற்றும் நோட் சீரிஸ் மாடல்களுக்கு இதே அப்டேட் வங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை அப்டேட் வரும் மாதங்களில் கேலக்ஸி எம் மற்றும் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

உங்கள் சாம்சங் கேலக்ஸி எம் 31 கள் புதுப்பிப்பைப் பெறவில்லை என்றால், வருத்தப்பட வேண்டாம். உங்களுடைய மொபைலில் Settings > System updates > Check for system updates > Download now > Install update என்கின்ற ஆப்ஷனை பயன்படுத்தி  ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யுஐ 3.1 அப்டேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Also Read : Samsung Galaxy M31s – Full phone specifications