Vodafone Cashback Offer 2020 | RechargeforGood | Vodafone Prepaid Recharge Best Offer
கொரோனா வைரஸ் ஊரடங்கை முன்னிட்டு பல வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு ஆன்லைனில் ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர்களுக்கு தற்போது வோடாபோன் ஐடியா நிறுவனம் கேஷ்பேக் சலுகையை அறிவித்து உள்ளார்கள்.
ஏற்கனவே இதே போன்ற சலுகைகளை ஏர்டெல் மற்றும் ஜியோ கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வோடாபோன் ஐடியா நிறுவனம் #RechargeforGood என்ற திட்டம் கொண்டு இந்தத் திட்டத்தின் மூலமாக பிற ப்ரீபெய்ட் கணக்குகளுக்கு ரீசார்ஜ் செய்வதற்கான கமிஷனைப் பெற உதவுகிறது.
MyVodafone மற்றும் MyIdea செயலிகளை பயன்படுத்தி பிற ப்ரீபெய்ட் கணக்குகளுக்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 6 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். கேஷ்பேக் தொகை 96 மணி நேரத்திற்குள் பயனர் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.
இந்த சலுகையை வோடபோன் நிறுவனம் ஏப்ரல் 30-ம் தேதி வரை கொடுக்கின்றது.