உங்களது வாட்ஸ்அப் கணக்கு தானாக நீக்கப்படும் ? 2021 வாட்ஸ்அப் புதிய அப்டேட் விரைவில் வருகிறது

வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தும், அந்தப் புதிய கொள்கையை பயனாளர்கள் ஏற்கவில்லை என்றால் அவர்களின் கணக்கு தானாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் முழு விபரங்களை பற்றி பார்க்கலாம்..

வாட்ஸ்அப் செயலி நம்முடைய வாழ்க்கையில் ஒரு அத்தியாவசியமான தேவையாகவே மாறிவிட்டது. எத்தனையோ செயலியில் இருந்தாலும் வாட்ஸ் அப் செயலியை தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றார்கள். ஏனென்றால் பயனாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான வசதிகளையும் வழங்க வாட்ஸ்அப் முயற்சிக்கிறது.

வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் வாங்கிய பிறகு பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றார்கள். வாட்ஸ்அப் நிறுவனம் அதன் சேவை விதிமுறைகளை வருகிற பிப்ரவரி 8, 2021 அன்று புதுப்பிக்கும் என்று தெரிகிறது. WABetaInfo இதைப்பற்றின ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து உள்ளது.

இதில் பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்கலாம் அல்லது அவர்களின் whatsapp கணக்குகளை ‘நீக்கலாம்’ (delete) என்று தெளிவாகக் கூறியுள்ளது. அதாவது நீங்கள் புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால் உங்களுடைய வாட்ஸப் கணக்கு தானாகவே எந்த நேரத்திலும் நீக்கப்படலாம்.

இந்தப் புதிய விதிமுறையில் பயனர்களின் சாட்களை சேமிக்கவும், நிர்வகிக்கவும், பேஸ்புக் வழங்கும் சேவைகளை வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய தகவலும் இதில் அடங்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.