வாட்ஸ் அப் செயலியில் அனுப்பும் செய்திகள் 7 நாட்களுக்குப் பிறகு வாட்ஸ்அப்பில் காணாமல் போகும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலி தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் “Disappearing Messages” அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.
இந்த புதிய அம்சம் மூலமா ஒரு பயனாளர் ஏழு நாள் காலத்தில் வாட்ஸ்அப்பைத் திறக்கவில்லை என்றால், செய்தி தானாகவே மறைந்துவிடும். இதன் முழு கட்டுப்பாடும் பயனாளர் கையில்தான் இருக்கும் விருப்பப்பட்டால் பயனாளர் இதை ON செய்யலாம் இல்லாவிட்டால் இதனை OFF செய்துவிடலாம். குழுக்களில் அனுப்பும் செய்திகள் மறைவது அந்தந்தக் குழுக்களின் அட்மின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
வாட்ஸ்அப் “Disappearing Messages” அம்சத்தை எப்படி ON/OFF செய்வது ?
- உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் செயலியை OPEN செய்யவும்.
- இப்போது WhatsApp chat-ஐ திறக்கவும்.
- மேலே உள்ள contacts name-ஐ Click செய்யவும்.
- Disappearing messages என்கின்றது ஆப்ஷன் இருக்கும், இதை உங்கள் தேவைக்கு ஏற்றவாறு இதை ON/OFF செய்து கொள்ளலாம்.