இணைய வேகத்தில் இந்தியா பிடித்த இடம் இதுதான் !

அக்டோபர் 2020ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும் ஓக்லா அறிக்கையின்படி, இணைய வேகத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..

இணைய வேக சோதனை தளமாக உள்ள ஓக்லா வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான கணக்கீட்டின்படி, இந்தியா அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தைவிட பின்தங்கிய நிலையில் உள்ளது.

மொபைல் வேக வரம்பு :

அக்டோபர் மாத கணக்கீட்டின்படி உலகளவில் இந்தியா 131-வது இடத்தை பிடித்துள்ளது. அதே சமயத்தில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 106-வது இடத்திலும், நேபாளம் 106 வது இடத்திலும்,இலங்கை 117-வது இடத்திலும் இருக்கிறது. 

மொபைல் இணைய வேகம் பொருத்தவரைக்கும் இந்தியாவில் 12.34 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை பெற்றுள்ளது

பிராட்பேண்ட் வேக வரம்பு :

அக்டோபர் மாத கணக்கீட்டின்படி உலகளவில் இந்தியா 66-வது இடத்தை பிடித்துள்ளது. அதே சமயத்தில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான்- 160 ஆவது இடத்திலும், நேபாளம்- 116ஆவது இடத்திலும்,இலங்கை 105 ஆவது இடத்திலும் இருக்கிறது. 

பிராட்பேண்ட் வேகத்தை பொருத்தவையில் இந்தியா 48.99 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை பெற்றுள்ளது