5 கடன் வழங்கும் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனம் விதிமுறைகளை மீறும் 5 கடன் வழங்கும் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது.

கொரோனா காலத்தில் நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகின்றார்கள். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் அப்ளிகேஷன் மூலமாக மிக எளிய முறையில் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி வருகின்றார்கள்.

இது போன்ற செயலிகளை வாடிக்கையாளர்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து அங்கு கேட்கப்படும் ஆவணங்களை கொடுத்து மூவாயிரம், ஐந்தாயிரம் என உடனடி கடன்களை வாங்கி வந்தார்கள்.

இதில் பல்வேறு செயலிகள் அரசின் அங்கீகாரம் பெறாத  செயலிகளாக இருந்து வருகிறது. இந்த செயலி மூலமாக வாங்கிய கடனுக்கு அதிக வட்டி , அபாராத வட்டி, கூட்டுவட்டி உள்ளிட்ட இன்னல்களுக்கு மக்கள் ஆளாவதாகவும் கடனை திரும்ப செலுத்த வழியுறுத்தி இந்த நிறுவனங்கள் மிரட்டல்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து பூகார்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. 

இந்நிலையில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் இணையவழி கடன் வழங்கும் 5 நிறுவனங்களில் செயலிகளை கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இதைப் பற்றி கருத்து கூறிய கூகுள் நிறுவனம் பயனரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எங்களது முதன்மை கொள்ளை. அதானல் நிதி சேவை சார்ந்த கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்று  கூறியுள்ளார்கள்.