திடீர் விலையேற்றம் ? Vi (Vodafone–Idea) வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Vi (Vodafone–Idea) தனது இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளார்கள், இதன் முழு விபரங்களை  பற்றி பார்க்கலாம்..

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான Vi (Vodafone–Idea) தன்னுடைய ரூ. 598 மற்றும் ரூ. 749 ரெட் போஸ்ட்பெயிட் திட்டங்களின் விலையை 50 ரூபாய் வரைக்கும் உயர்த்தி உள்ளார்கள். 

வோடபோன் ஐடியாவின் (Vodafone–Idea) வலைத்தளத்தின்படி, ரூ.,598 திட்டம் இப்போது ரூ.,649 க்கு கிடைக்கும், அதே நேரத்தில் ரூ.,749 திட்டத்தின் விலை ரூ.,799க்கு கிடைக்கும். Vi (Vodafone–Idea) RED குடும்பத் திட்டங்களை வழங்கும் அனைத்து வட்டங்களிலும் புதிய கட்டணங்கள் இப்போது பொருந்தும்.