சாம்சங் கேலக்ஸி A31 மொபைலின் விலை குறைந்தது !

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A31 மொபைலின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது.

சாம்சங் நிறுவனம் சமீபத்தில்தான் கேலக்ஸி A32 மொபைலை அறிமுகம் செய்திருந்தது, அறிமுகம் செய்து சில நாட்களிலேயே கேலக்ஸி A31 மொபைலின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது. அதைப்போன்று கேலக்ஸி A32 ஸ்மார்ட்போனிற்கு கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.

Also Read : Samsung Galaxy A31 – Full Specifications

விலை குறைப்பின் சாம்சங் கேலக்ஸி A31 மொபைல் என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது ? 

விலை குறைப்பின் சாம்சங் கேலக்ஸி A31 மாடலின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

RamInternal StoragePriceBuy
6 GB128 GB16,999Flipkart

சாம்சங் கேலக்ஸி A32 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை :

HDFC வங்கி கார்டு அல்லது செஸ்ட்மனி பயன்படுத்தி கேலக்ஸி A32 மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. கேஷ்பேக் சலுகையை தொடர்ந்து எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி A32 க்காக தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை பரிமாறிக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பழைய கைபேசியின் மதிப்பை விட ரூ. 3,000 கூடுதலாகக் கிடைக்கும்.