சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைந்துள்ளது.
சாம்சங் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ21எஸ் என்கின்ற மொபைலை அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் தற்போது விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது.இந்த மொபைல் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி, 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. இது கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.
Also Read : Samsung Galaxy a21s Full Specification
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் விலை குறைப்புக்குப் பின்பு 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலானது ரூ.13,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலானது 14,999 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலுக்கு எந்த ஒரு விலை குறைப்பும் செய்யப்படுவதில்லை.