ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் Moto E7 Power என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..
Redmi 9i, Infinix Smart 5, Realme C15-கக்கு போட்டியாக மோட்டரோலா நிறுவனம் இந்தியாவில் Moto E7 Power என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் டஹிட்டி புளூ மற்றும் கோரல் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார், மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர், 5,000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மேலும் முன்பக்கத்தில் 5 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போனின் இந்திய விலை :
மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.7,499 க்கும், 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.8,299 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ இ 7 பவர் மொபைலை எங்கு வாங்கலாம் ?
மோட்டோ இ 7 பவர் மொபைல் வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் (நண்பகல்) பிளிப்கார்ட் மற்றும் முன்னணி சில்லறை கடைகள் வழியாக விற்பனைக்கு வருகின்றது.
Motorola Moto E7 Power – Full phone specifications
Launch Date | 19 Feb 2021 |
Display | 6.51 inches 20:9 ratio IPS LCD HD+ display |
Build | Glass front, plastic back, plastic frame |
Weight | 180 g |
SIM Slot | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Card Slot | Expandable Upto 1 TB Memory Card Slot Type : Hybrid Slot |
Colors | Tahiti Blue, Coral Red |
MAIN CAMERA | 13MP Main + 2MP Macro Dual Rear Camera Setup |
Video (Back) | 1080p@30fps |
SELFIE CAMERA | 5 MP, f/2.2 |
Video (Front ) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | MediaTek Helio G25 Processor |
GPU | PowerVR GE8320 |
OS | Android 10 |
BATTERY | 5000 mAh Battery |
Charging | 10W Charging |