1GB டேட்டாவின் விலை ரூ.20 ஆக உயரும் ? ஜியோ புதிய கட்டணம்

Reliance Jio Data Price Hiked to Rs. 20 per GB

சமீபத்தில்தான் வோடபோன் நிறுவனம் 1GB டேட்டாவிற்கு 35 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில் தற்போது ஜியோ நிறுவனமும் 1 GB டேட்டாவிற்கு 20 ரூபாய் வசூலிக்க திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையை TRAI இடம் ஜியோ மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் ஜியோவின் டேட்டா கட்டணங்கள் பல மடங்கு உயர வாய்ப்பு இருக்கின்றது.