ரியல்மி 6 சீரிஸ் மொபைல்களை சீக்கிரமாக வாங்க வேண்டுமா

Realme 6 Series Sale Date in India

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ இந்தியாவில் மார்ச் 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

மார்ச் 11-ஆம் தேதி ரியல்மி 6 விற்பனைக்கு வருகிறது அதைத்தொடர்ந்து ரியல்மி 6 ப்ரோ 12-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இரு மொபைல்களும் பிளிப்கார்ட், ரியல்மி.காம் வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் சில்லறை கடைகள் விற்பனைக்கு வர இருக்கிறது.

விற்பனை நாளில் பல்வேறு வாடிக்கையாளர்கள் மொபைல் வாங்க ஆர்வமாக இருப்பார்கள், இதைக் கருத்தில் கொண்டு ரியல்மி நிறுவனம் ரூ.3,000 முன்பணம் செலுத்தி மார்ச் 5 முதல் மார்ச் 10 வரை முன்பதிவு செய்பவர்களுக்கு மொபைல் போன் உறுதி செய்யப்படும் என கூறி உள்ளார்.

பின்னர் நீங்கள் Realme 6 Pro-வை வாங்க விரும்பினால், மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை முழுமையான பேமெண்ட் செலுத்த வேண்டும். அதேபோல் நீங்கள் Realme 6 வாங்க விரும்பினால், மார்ச் 11 முதல் மார்ச் 15 வரை முழுமையான பேமெண்ட் செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தும் பட்சத்தில் மொபைல் மூன்று நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என ரியல்மி கூறியுள்ளார்கள்.