JIO Recharge Plan 4999 : Jio Rs 4999 Long-Term Prepaid Recharge Plan
ஜியோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு நீண்டகால ரீசார்ஜ் திட்டங்களில் அதிக சலுகைகளை கொடுத்து வருகிறது. ஏற்கனவே உள்ள ரூ.1,299, ரூ.2,121 ரீச்சார்ஜ் திட்டத்தில் பல்வேறு சலுகைகளை கொடுத்தார்கள்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.4,999 எனும் நீண்ட கால ரீசார்ஜ் திட்டத்தை திடீரென நிறுத்தியது ஜியோ. தற்போது இந்த திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளார்கள்.
ஜியோ ரூ.4,999 திட்டத்தின் நன்மைகள் பொருத்த வரைக்கும், ரூ.4,999க்கு ரீசார்ஜ் செய்தால், மொத்தமாக 350 ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ வரம்பற்ற இலவச குரல் அழைப்பு, அதேபோல் பிற தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு 12,000 நிமிட இலவச அழைப்புகள் கிடைக்கும் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளார்கள்.