Phonepe yes bank issue – PhonePe down: Due to UPI partner Yes Bank’s crisis
நிதி நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் யெஸ் வங்கியின் நிர்வாகத்தை 30 நாட்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி இடைநீக்கம் செய்துள்ளது. இதன் காரணமாக வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ரூ. 50,000 வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
வங்கி சேவை மட்டுமின்றி யெஸ் வங்கி உடன் கூட்டு வைத்துள்ள போன்பே செயலி பாதிப்பை அடைந்துள்ளது. YES Bank வங்கியை ரிசர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து செய்தியை அறிந்த பல்வேறு வாடிக்கையாளர்கள் போன்பே செயலி மூலமாக ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டியதால் சர்வர் முடங்கியது.
இதைப் பற்றி விளக்கம் அளித்துள்ள போன்பே நிர்வாகம் இந்த பாதிப்பு தற்காலிகமானதுதான் விரைவில் சரி செய்யப்படும் என கூறியுள்ளார்கள்.