செப்டம்பர் மாதத்தில் ரியல்மி நிறுவனம் Realme X7 மற்றும் Realme X7 Pro மொபைலை சீன சந்தையில் அறிமுகம் செய்தார்கள். இந்த தொலைபேசிகள் சீன சந்தைக்கு வெளியே இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் Realme X7 Pro ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே ரியல்மி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன மாதவ் ஷெத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் Realme X7 Series மொபைலில் எவ்வளவு விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் ?
ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் சீனாவில் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது (CNY 1,799) ரூ.20,300 க்கும், இதன்8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ( CNY 2,399 ) ரூ.27,000 க்கும் அறிமுகமானது
ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது (CNY 2,199) ரூ.24,800 க்கும், இதன்8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ( CNY 2,499) ரூ.28,200 க்கும் மற்றும் இதன் டாப் எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி மாடலானது (CNY 3,199) ரூ.36,100 க்கும் அறிமுகமானது.