இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் விரைவில் Infinix Smart HD என்கின்ற மொபைலை அறிமுகம் செய்ய இருக்கின்றார்கள் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட்போன் தொடரில் “Infinix Smart HD” என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்கின்றார்கள். இது ஒரு மலிவு ஸ்மார்ட்போனாக இருக்கும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட சமூக வலைதள பக்க புகைப்படம் மூலமாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 5,999-க்கு அறிமுகமாகும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Flipkart வலைத்தளம் மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.