பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ரியல்மி நார்சோ 20 ப்ரோ மொபைலுக்கு தற்காலிகமாக ரூ.1,000 தள்ளுபடி அறிவித்துள்ளார்கள்.
ரியல்மி நார்சோ 20 ப்ரோ மொபைல் செப்டம்பர் 21ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டபோது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் ரூ.14,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.16,999 என்ற விலையுடனும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
விலை குறைப்புக்கு பின் இந்த மொபைல் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் ரூ.13,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.15,999 என்ற விலையுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனுக்கு கேஷ்பேக் போன்ற கூடுதல் சலுகையும் Flipkart-ல் கிடைக்கின்றது.இந்த சலுகை நவம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.