இந்தியாவில் எந்த ஸ்மார்ட்போன் பிராண்ட் முதலிடத்தில் இருக்கின்றது ?

இந்தியாவில் சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகள் எது என்பது பற்றின கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிகவும் சவால் நிறைந்த ஆண்டாக கருதப்படுகின்றது. COVID காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால் மொபைல் விற்பனையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது.

அதன்பிறகு மொபைலில் தேவை மிக அதிகமாக இருந்ததால் விற்பனையும் மிக அதிகமாக இருந்தது. தற்போது வெளியாகியிருக்கும் கவுன்டர்பாயின்ட் அறிக்கையின்படி 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 53 மில்லியன் யூனிட்களை எட்டியுள்ளது. 

இந்த 2020 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சாம்சங் நிறுவனம் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் 24% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. 

மேலும் சியோமி நிறுவனம் 23% சந்தைப் பங்கைக் கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. விவோ நிறுவனம் 17% சந்தைப் பங்கைக் கொண்டு நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய பிராண்டாக திகழ்கிறது. 

ரியல்மி  16% சந்தைப் பங்கைக் கொண்டு நான்காவது இடத்தில் உள்ளது. சீன ஸ்மார்ட்போன்களை வாங்க கூடாது என்கிற இந்தியர்களின் எண்ணம்தான் சியோமி நிறுவனத்தை இந்தியாவில் இரண்டாவது இடத்திற்கு தள்ளபட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.