போக்கோ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் போன் பற்றிய தகவல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
போக்கோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மொபைல் போன் மிட்ரேன்ஜ் விலையில் தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 மாடலின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்கோ நிறுவனத்தின் மேலாளர் அங்கஸ் கை ஹோ என்ஜி புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் டீசரை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த டீசரின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் M2010j19CG எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது. அதே சமயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக சியோமி ரெட்மி நோட் 10 4ஜி ஸ்மார்ட்போன் வேரியண்டின் விபரங்கள் வலைத்தளத்தில் கசிந்தது. இந்த மாடல் M2010J19SC என்ற மாடல் எண்ணுடன் சீனாவின் 3C தளத்தில் காணப்பட்டுள்ளது.
இவைகளை வைத்து பார்க்கும் போது புதிய போக்கோமொபைல் ரெட்மி நோட் 10 மாடலின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று யூகிக்க முடிகின்றது. மேலும் இந்த புதிய போக்கு மொபைல் இந்திய சந்தையில் எப்போது வெளியாகும் என்ற எந்த தகவலும் இதுவரைக்கும் இல்லை.