இண்டேன் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய புதிய நம்பர் ? நவ.1 முதல் அமல்!

இண்டேன் கேஸ் சிலிண்டர் முன்பதிவு எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை இண்டேன் நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் SMS மூலம் அனுப்பி உள்ளார்கள்.

இண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு புதிய தொலைபேசி எண் :

இந்தியன் நிறுவனம் சமையல் கேஸ் முன்பதிவு செய்யும் என்னை மாற்றம் செய்துள்ளார்கள். நீங்கள் இண்டேன் கேஸ் (Indane Gas) வாடிக்கையாளராக இருந்தால், இனிமேல், பழைய எண்ணில் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாது.

முன்னதாக இண்டேன் வாடிக்கையாளர்கள் 9911554411- என்ற எண்ணை அழைப்பதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து வந்தனர்.ஆனால் இனி புதிய எண்ணான 7718955555 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் மூலம் எரிவாயுவை முன்பதிவு செய்யலாம்.அதைப்போல் வாட்ஸ்அப் மூலம் இன்டேன் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய விரும்பினால் REFILL என டைப் செய்து 7588888824 என்ற தொலைபேசி எண்ணிற்கு அனுப்பவும். முக்கியமாக, நீங்கள் செய்தி அனுப்பும் தொலைபேசி எண், இண்டேன் டீலரிடம் பதிவு செய்யப்பட்ட உங்களது எண்ணாக இருக்க வேண்டும்.