பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட SAI என்கின்ற செயலியை இந்திய ராணுவத்தின் சார்பில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் சார்பில் கட்டமைப்பு நிர்வாக மென்பொருள் மற்றும் மொபைல் இணைய செயலி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு “SAI” என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த செயலி வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போல end-to-end secure voice, text மற்றும் voice அழைப்பு வசதிகளை கொண்டுள்ளது.
ராணுவ சைபர் பிரிவு மற்றும் ‘சேர்ட்-இன்’ குழுவில் உள்ள சிறப்புத் தணிக்கையாளரால் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ராணுவ சைபர் குழு மற்றும் தணிக்கையாளர்கள் (சிஇஆர்டி-ஐஎன்) வாயிலாக இந்த செயலி சோதனை செய்யப்பட்டது. இந்த செயலியை அறிவு சார் சொத்துரிமையாக தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளும், என்ஐசி கட்டமைப்பில் வெளியிடுவதற்கும் ஐஓஎஸ் தளத்தில் இயங்குவதற்கும் ஆன பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் உள்ள ராணுவ சேவைகளுக்குள் தகவல் பரிமாற்ற செயலியாக இது உபயோகப்படுத்தப்பட உள்ளது.
இந்த செயலியின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த செயலியை முன்னெடுத்த கர்னல் சாய் சங்கரை பாராட்டினார்.