பப்ஜி இனி இந்தியாவில் விளையாட முடியாது ? முற்றிலும் தடை

இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இந்தியாவில் யாரும் பப்ஜி விளையாட முடியாது.

பப்ஜி விளையாட்டு ஏற்கனவே பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

.இந்த விளையாட்டை இந்தியர்கள்தான் அதிக அளவில் விளையாடி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் முதல் பாதியில் பப்ஜியின் சர்வதேச வருமானம் கிட்டத்தட்ட ரூ. 9,731 கோடியாக இருந்தது.

ஏற்கனவே பப்ஜி விளையாட்டை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டாலும் ஒரு சிலர் வெவ்வேறு இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து தொடர்ந்து விளையாடி வந்தனர். இந்நிலையில் பப்ஜி விளையாட்டை முழுவதுமாக தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு பப்ஜி விளையாட்டு செயலி கிடைக்கும் மறைமுக சர்வர்களையும் முடக்கியுள்ளது.