ரூ.2,000 குறைவாக POCO X3 மொபைலை வாங்கலாம் !

போக்கோ நிறுவனத்தின் போக்கோ X3 மொபைலுக்கு ரூ.2,000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகின்றது.

போக்கோ நிறுவனம் மார்ச் 30ஆம் தேதி இந்தியாவில் போக்கோ X3 ப்ரோ என்கின்ற மொபைலை அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த அறிமுக நிகழ்வில் போக்கோ X3 ஸ்மார்ட்போனுக்கான விலை குறைப்பையும் அறிவித்துள்ளார்கள் போக்கோ.

Also Read : Xiaomi Poco X3 – Full Specification

போக்கோ X3 மொபைலின் பழைய விலை :

போக்கோ X3 மொபைல் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது அறிமுகம் செய்தபோது 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.16,999 க்கும், இதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.18,499 க்கும், மற்றும் கடைசியாக 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-டயர் வேரியண்டின் விலை ரூ.19,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

விலை குறைப்புக்கு பின் போக்கோ X3 மொபைலின் விலை :

விலைக்குறைப்பிற்கு பின்னர் போக்கோ X3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.14,999 முதல் வாங்க கிடைக்கும். இந்த விலை குறைப்பு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றது.

RamInternal StoragePriceBuy
6 GB64 GBRs. 14,999FlipKart
6 GB128 GBRs. 16,999FlipKart
8 GB128 GBRs. 17,999FlipKart